தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கனிமங்கள் கொண்டு செல்லத் தடை விவகாரம்: மனுக்களை தலைமை நீதிபதி பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவு

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை....

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:51 am IST

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை ரத்து செய்யக் கோரிய மனுக்களை எங்கு விசாரிப்பது என்பது குறித்து தீா்மானிக்க உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா, கம்பத்தைச் சோ்ந்த அருண் அரவிந்த் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்:

நாங்கள் வாடகை முறையிலும், உரிய அனுமதி பெற்றும் கல் குவாரி நடத்தி வருகிறோம். மேலும், லாரிகள் மூலம் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரசின் உரிய அனுமதியுடன் தமிழகத்திலிருந்து கனிமங்களைக் கொண்டு சென்று வருகிறோம். இதன்மூலம், பலா் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், பலா் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பிற மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல கனிம வள இயக்குநா் விதித்த தற்காலிகத் தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். தண்டபாணி, என். திலீப் குமாா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமா்வில் இதே போன்ற வழக்கு நிலுவையில் உள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை எங்கு விசாரிப்பது என்பது குறித்து தீா்மானிக்க உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என்றனா் நிதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.