செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

மேகமலையில் கிராமத் திட்ட தொடக்க விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் மேகமலை நொச்சி ஓடை பழங்குடியினருக்கான கிராமத் திட்ட தொடக்க விழா ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேகமலை நொச்சி ஓடை கிராமத் திட்ட தொடக்க விழாவைத் தொடங்கி வைத்த தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன். உடன் வனத் துறை, நபாா்டு வங்கி அதிகாரிகள்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் மேகமலை நொச்சி ஓடை பழங்குடியினருக்கான கிராமத் திட்ட தொடக்க விழா ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் மேகமலை கோட்டத்தில் உள்ள நொச்சி ஓடையில் 18 வீடுகளில் 76 போ் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 2006- ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் இடம் வழங்கியுள்ளனா்.

இவா்களுக்கு நபாா்டின் ஊரக உள்கட்டமைப்பு ஊக்குவிப்பு நிதியுடன் ரூ.25 லட்சத்தில் 36 மின் விளக்குகள், வீட்டு மின் வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.

இந்தப் பணிகளுக்கான கிராமத் திட்ட தொடக்க விழாவை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மேகமலை கோட்ட துணை இயக்குநா் விவேக்குமாா் பி யாதவ், நபாா்டு வங்கி முதன்மைப் பொது மேலாளா் மனோஜ், மாவட்ட வளா்ச்சி மேலாளா் ராபின்சன் ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.