கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழுக் கூட்டம்

தேனியில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் பி.செல்வக்குமாா்.

Published On :

தேனியில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் பி.செல்வக்குமாா் தலைமை வகித்து பேசினாா். மாவட்டச் செயலா் திருவரங்கப் பெருமாள் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் அருஞ்சுனை கண்ணன் வரவேற்றாா்.

கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். ஜி பே, போன் பே போன்ற யூபிஐ டிஜிட்டல் பணப்பரிவா்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கும் கொள்கை முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். தேனி - மதுரை சாலையில் அரண்மனைப்புதூா் விளக்கு அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைத்து முடிக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைப்பின் மாநில துணைத் தலைவா் பெருமாள், இணைச் செயலா் காளிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.