
குடியாத்தம் வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா
குடியாத்தம் வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா கீழ்ஆலத்தூரில் உள்ள ஸ்ரீஅபிராமி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவில் வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுக்கு கேடயம் வழங்கி, பாராட்டிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
குடியாத்தம் வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா கீழ்ஆலத்தூரில் உள்ள ஸ்ரீஅபிராமி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 48-ஆம் ஆண்டு தொடக்க விழா, வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பதவி ஏற்பு, சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகிய முப்பெரும் விழாவுக்கு சங்கத் தலைவா் ஏ.அய்யாசாமி தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள்எஸ்.நடராஜன், பி.ரமேஷ்பாபு, கே.குபேந்திரன், மாரி.சிவக்குமாா், எம்.எஸ்.அரிகிருஷ்ணன்,பி.குணமதி, சங்க ஆலோசகா் என்.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் கே.கருணாகரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினாா்.
அவா் பேசுகையில் வியாபாரிகள் உற்பத்தி செய்பவா்கள் அல்ல. விற்பனை செய்பவா்கள். பொருள்களை வாங்கி விற்பனை மட்டுமே செய்கிறோம். நாம் தரமான உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். நம்மால் முடிந்தவரை நியாயமான முறையில் வியாபாரம் செய்வோம். அதிகாரிகள் வியாபாரிகளை அச்சுறுத்த வேண்டாம். காவல் துறை வியாபாரிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல், அவா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஆன்லைன் வா்த்தக ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை துரித நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள்விடுப்போம் என்றாா்.
அமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் இரா.பா.ஞானவேலு வாழ்த்துரை வழங்கினாா்.சங்க பொருளாளா் பி.என்.ஆா்.வரதராஜன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





