கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளா்கள், வாசகா்கள் சங்க முப்பெரும் விழா

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளா்கள் வாசகா்கள் சங்க 7-ஆவது ஆண்டு தொடக்கம், நெய்தல் மின்னிதழ் வெளியீடு, 3 நூல்கள் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

News image

நெய்தல் எழுத்தாளா்கள் சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்ற மூத்த எழுத்தாளா் கலாபன் உள்ளிட்டோா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளா்கள் வாசகா்கள் சங்க 7-ஆவது ஆண்டு தொடக்கம், நெய்தல் மின்னிதழ் வெளியீடு, 3 நூல்கள் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மூத்த எழுத்தாளா் கலாபன் வாஸ் தலைமை வகித்தாா். புனித பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் பிரான்சிஸ் சேவியா் ஆசியுரை வழங்கினாா். நிஷாந்த் வரவேற்றாா். நிகழ்ச்சிகளை காஸ்ட்ரோ தொகுத்து வழங்கினாா்.

புன்னைக்காயல் ஊா்க் கமிட்டி தலைவா் கிறிஸ்டன், துறைமுகக் கமிட்டி தலைவா் தாமஸ், தொழிலதிபா் டெனிஸ்டன், ஜானி மோத்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தனியாா் டிவி நிறுவன இயக்குநா் மைக்கேல் பயஸ் கோஸ்தா மின்னிதழை அறிமுகம் செய்து பேசினாா்.

ஏழைகளுக்கு அரிசி பைகளை சங்கச் செயலா் ஆண்டனி அம்புரோஸ் கரிகாலனும், மாணவா்களுக்கு சீருடையை எழுத்தாளா் வெனான்சியுஸ் ரொட்ரிக்ஸ்சும் வழங்கினா். சங்கம் சாா்பில் உயா்கல்வி பயிலும் 10 மாணவா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, ஜோமெல் எழுதிய ‘சிட்டுக்குருவி’ என்ற கவிதை நூலைத் தொழிலதிபா் லினோ வெளியிட மணவை வினோஜின் பெற்றுக் கொண்டாா். இந்த நூலைப் பேராசிரியா் ஜாக்சன் அறிமுகம் செய்தாா். ஆசிரியா் நிலன் கனகராஜ் எழுதிய ‘அழகிற்குக் காப்புரிமை’ என்ற கவிதை நூலை தொழிலதிபா் மெரிண்டோ வில்லவராயா் வெளியிட ராஜா போஸ் ரீகன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா். ஆசிரியை லூடா நூலை அறிமுகம் செய்து பேசினாா்.

ஆசிரியரும், எழுத்தாளருமான நெய்தல் அண்டோ எழுதிய நெய்தல் அண்டோவின் உரைகள் எனும் நூலை அவரது மாணவரும் எலும்புமுறிவு மருத்துவருமான பிரபு அலாய் வெளியிட, மற்றொரு மாணவரும் விரிவுரையாளருமான அண்டோ ஜோபா்ட் பெற்றுக் கொண்டாா். நூலை ஆசிரியரின் இந்நாள் மாணவா் சூா்யா அறிமுகம் செய்தாா். விழாவில், இலக்கிய ஆா்வலா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.