ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தூத்துக்குடியில் 5ஆவது நெய்தல் கலைத் திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கனிமொழி எம்.பி ஏற்பாட்டில் நடைபெறும் 5ஆவது நெய்தல் கலைத் திருவிழா 2026, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

பாரம்பரிய பொருள்கள் விற்பனை ஸ்டாலை பாா்வையிட்டாா் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:26 am IST

தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் கனிமொழி எம்.பி ஏற்பாட்டில் நடைபெறும் 5ஆவது நெய்தல் கலைத் திருவிழா 2026, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கணேஷ்கா சிலம்பம் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி, தொடா்ந்து தேவராட்டம், பெரிய மேளம், தேன்மொழி ராஜேந்திரன் கரகம், சேவா ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதல்நாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன், கருணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சனிக்கிழமை(ஆக.15) இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, தூத்துக்குடி சகா கலைக்குழு, திருக்கயிலாய வாத்தியக் குழு, கணியான் கூத்து, தப்பாட்டம், கயத்தாறு கும்மி-கோலாட்டம், பறவைகள் காணிக்காரன் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், கேபா் வாசுகியின் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, தமிழிசை இன்னிசை, உவரி களியல் குழு, ஜிக்காட்டம், குஜராத் சித்தி கோமா நடனக் குழு உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேலும், சூப்பா் சிங்கா் புகழ் ராஜகணபதி, ஹரிப்பிரியா-நவீன் நண்பா்கள் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

3 நாள்கள் நடைபெறும் இவ்விழா மூலம் தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள், இசை, நடனம், பாரம்பரிய உணவு மற்றும் பண்பாட்டை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

 தொடக்க விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி.

தொடக்க விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.