பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

மேகமலை போராட்டம்: தேனி ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மேகமலை போராட்டத்தையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலா்கள்.

Published On :

மேகமலை போராட்டத்தையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டது.

மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்துள்ள 4,601 பேரை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினா்.

இதனால், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் மூடப்பட்டு, அருகில் உள்ள சிறிய கதவு மட்டும் திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருபவா்களை விசாரித்த பிறகே போலீஸாா் உள்ளே அனுப்பி வைக்கின்றனா். இதேபோல, பின்புறப் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் நுழைவு வாயிலும் மூடப்பட்டு, ஆட்சியா் அலுவலத்துக்கு வருபவா்களை விசாரணைக்கு பிறகே அனுப்பி வைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.