சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2012, 2:36 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

வத்திராயிருப்பு, குன்னூர், மேலக்கோபாலபுரம், சேதுநாராயணபுரம் மற்றும் கான்சாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த விளையாட்டு விழா போட்டிகள் நடைபெற்றது.

ஆசிரியப் பயிற்றுநரும், ஒருங்கிணைப்பாளருமான செல்வி வரவேற்றார்.போட்டியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் 200 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் மெழுகு பென்சில்கள், பென்சில், ரப்பர், சார்ப்பனர், வண்ணப் பென்சில்கள், நோட்டு, ஸ்கெட்ச் பாக்கெட் உள்ளிட்ட எழுது பொருட்கள் அடங்கிய புத்தகப் பை பரிசாக வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய சிறப்பு ஆசிரியர்கள் செ.காணிராஜா, ரா.செந்தில்குமார், த.செல்வமணி மற்றும் தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.