நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

8 வெள்ளாடுகளை காணவில்லை என புகார்

News image
Updated On :13 டிசம்பர் 2012, 1:26 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 8 வெள்ளாடுகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் அய்யனார் (30).

இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமான 5 வெள்ளாடுகள், வெள்ளைச்சாமி என்பவருக்குச் சொந்தமான 2 வெள்ளாடுகள் மற்றும் மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான ஒரு வெள்ளாடு ஆகியவற்றை, லட்சுமியாபுரம்-மங்களம் சாலையில் உள்ள ஒரு பொதுவான இடத்தில் அடைத்து வளர்த்து வந்துள்ளனர்.

திங்கள்கிழமை இரவு ஆடுகளை தொழுவத்தில் அடைத்துள்ளார்கள். மறுநாள் காலை வந்து பார்த்த போது 8 வெள்ளாடுகளையும் காணவில்லையாம்.இது குறித்து அய்யனார், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சார்பு ஆய்வாளர் புவனேஷ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.