நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சி நிறைவு நாளான வியாழக்கிழமை, பயிற்சியை பார்வையிட்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு பேசுகையில் கூறியதாவது:

News image
Updated On :13 டிசம்பர் 2012, 1:39 pm

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சி நிறைவு நாளான வியாழக்கிழமை, பயிற்சியை பார்வையிட்டு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு பேசுகையில் கூறியதாவது:

ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக 20 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் உட்கூறுகள், தமிழக அரசின் நலத்திட்டங்கள், பதிவேடுகள் பராமரிப்பு, யோகா உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிகள் மேம்பாட்டிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார் அவர்.

பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் பொற்கொடி, உமா மகேஸ்வரி, முருகு திருநாவுக்கரசு, வனிதா, வாசுகி, கிருஷ்ணமூர்த்தி, வாசுகி, குருசாமி, விஜயட்சுமி மற்றும் தலைமையாசிரியர்கள் செயல்பட்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 141 பள்ளிகளில் இருந்து வந்திருந்த 846 பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   பயிற்சியை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.