/

தைலாகுளத்தில் விதை கிராமத் திட்ட பயிற்சி முகாம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் விதைக் கிராமத் திட்ட பயிற்சி தைலாகுளம் கிராமத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.பயிற்சியைத் தொடங்கி வைத்துப்

News image
Updated On :17 டிசம்பர் 2012, 5:20 pm

கோ.ஜெயக்குமார்

 ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் விதைக் கிராமத் திட்ட பயிற்சி தைலாகுளம் கிராமத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து கூறியதாவது:

வேளாண்மைத் துறையினரின் தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் செவ்வனே கடைபிடித்து உற்பத்தி இலக்கினை இரட்டிப்பாக்கிட அனைத்து விவசாயிகளும் பாடுபட வேண்டும் என்றார்.பயிற்சியின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஆறுமுகம் விளக்கினார்.

விதையின் முக்கியத்துவம், விதை வகைகள், விதைப் பதிவு நடைமுறைகள் மற்றும் விதை உற்பத்தியின் பலன்கள் குறித்து விருதுநகர் விதைச் சான்று உதவி இயக்குநர் ராமமூர்த்தி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

பயிறு வகைகளின் சாகுபடி முறைகள் மற்றும் பயறுவகை மகசூலைப் பெருக்கிடுவதற்கான வழிமுறைகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை அலுவலர் முத்துலட்சுமி எடுத்துரைத்தார்.

வேளாண்மைத் துறையின் மானியத்திட்ட விவரங்கள் மற்றும் இடுபொருட்கள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் துணை வேளாண்மை அலுவலர் சிவபெருமான் விளக்கினார்.

பயிற்சியில் தைலாகுளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் ரமேஷ் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.