தகராறில் கடையை சேதப்படுத்தியதாக 2 பேர் கைது

காரியாபட்டி பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமூப்பர். இவருக்கு, முத்துபாண்டி, (30), பால்பாண்டி (26), சின்னபாண்டி (24) என மூன்று மகன்கள் உள்ளனர். முத்துபாண்டி, அதே ஊரைச் சேர்ந்த காமாட்சியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.
Updated on
1 min read

 காரியாபட்டி பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமூப்பர். இவருக்கு, முத்துபாண்டி, (30), பால்பாண்டி (26), சின்னபாண்டி (24) என மூன்று மகன்கள் உள்ளனர். முத்துபாண்டி, அதே ஊரைச் சேர்ந்த காமாட்சியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

   முத்துபாண்டி, தன் பூர்வீக இடத்தில் பலசரக்கு கடை ஆரம்பித்துள்ளார். இதற்கு அவரது தந்தை எதிர்ப்புத் தெரிவித்து, கடையை காலி செய்ய கூறியுள்ளார்.

ஆனால் முத்துபாண்டி மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த முத்துமூப்பர், தாய் மீனம்மாள், மற்றும் சகோதரர்கள் கடையை அடித்து நொறுக்கிவிட்டனராம்.

 இதில் கர்ப்பிணியான காமாட்சிக்கு காயம் ஏற்பட்டது. ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பலசரக்குகள் வீணானது.

  காமாட்சி தந்தை அன்பு வீட்டையும் நொறுக்கி, வீட்டிலிருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து முத்துபாண்டி அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பாண்டி, சின்னபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com