நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் முறை குறித்து அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி, உதவிப் பேராசிரியர் தீபாகரன் ஆகியோர் கூறியதாவது: ஆகாயத்தாமரை செடிகள் நீர்நிலை தாவரங்களை அழிப்பதோடு, தண்ணீரில் ஆக்சிஜன் அளவையும் குறைக்கின்றன, கொசுக்கள் பெருக்கத்திற்கும் இடமளிக்கின்றன.
இவை அணைகளின் நீர்பிடிப்புத் தன்மையைக் குறைக்கின்றன. காட்மியம், நிக்கல், குரோமியம் மற்றும் மெர்குரி உள்ள, மாசுபட்ட நீர்நிலைகளில் விரைவாக வளரும் இவற்றை கைகளின் மூலமோ அல்லது நீளமான இரும்பு தப்பை கொண்டு சேகரித்து அப்புறப்படுத்தலாம். இதனை உலரவைத்து மக்கிய அங்கக உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
கிளைப்போசேட் 10 மில்லி, அம்மோனியம் சல்பேட் 20 கிராம், 1.0 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் ஆகாயத் தாமரையை மறு உற்பத்தி திறன் இல்லாமல் முழுமையாக அழித்து விடலாம். அல்லது 2.4 டி சோடியம் உப்பு 8 கிராம், யூரியா 20 கிராம் (அல்லது பாராகுவாட் 6 மில்லி) ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து இலையின் மேல் தெளிப்பதன் மூலமும் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
இந்த களைக்கொல்லி தெளிப்பதன் மூலம் மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை. களைக்கொல்லி தெளிக்கப்பட்டபின் நன்கு உலர்ந்த ஆகாயத்தாமரை செடிகளை அணை, ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் இருந்து முழுவதுமாக சேகரித்து இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
விவசாயிகளுக்குப் பயிற்சிகாரியாபட்டி, டிச. 29: திருச்சுழி பகுதியில் வேளாண்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ், திருந்திய நெல் சாகுபடியில், விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநர் நாச்சியாரம்மாள், நெல் சாகுபடி தொழில் நுட்பங்களான நெல் ரகத்தில் சான்று பெற்ற உயர் விளைச்சல் ரக தேர்வு, விதை அளவு, நாற்று இடைவெளி, நடவு, மார்க்கர், கோனோகருவி மூலம் களை எடுத்தல், உரம், நீர் சிக்கனம் பற்றி விளக்கினார்.
தொழில் நுட்ப மேலாளர் பிரேமா காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் பாசனம் செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்றார். உதவி மேலாண்மை அலுவலர்கள் கணேசன், ராமராஜ், செந்தில்குமார் ஆகியோர் நடவு, வயல் தயாரித்தல், தக்கை பூண்டு
பயிரிடுதலின் முக்கியத்துவம் பற்றி பேசினர்.
திருச்சுழி, கத்தாளம்பட்டி, முத்துராமலிங்கபுரம், மிதலைகுளம், பரளச்சி, மேலையூர் பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தொழில் நுட்ப வல்லுனர்கள் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

