காரியாபட்டியில் கண் சிகிச்சை முகாம்

காரியாபட்டியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சங்கரா கண் மருத்துவமனை மற்றும் வட்டார மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வு சங்கம் ஆகியவை இணைந்து, இலவச லென்ஸ் பொருத்தும் கண் சிகிச்சை
Updated on
1 min read

காரியாபட்டியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சங்கரா கண் மருத்துவமனை மற்றும் வட்டார மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வு சங்கம் ஆகியவை இணைந்து, இலவச லென்ஸ் பொருத்தும் கண் சிகிச்சை முகாமை நடத்தின. நலவாழ்வு சங்கச் செயலாளர் சதுரகிரி தலைமை வகித்தார். நலவாழ்வு சங்கத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மனுநூல் நிலைய நிறுவனர் பரதன் துவக்கி வைத்தார். 200-க்கு மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 50 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து, இலவசமாக லென்ஸ் பொருத்தப்பட்டது. சங்க உறுப்பினர்கள் பாண்டி, மோகன், கண்ணன், தங்கவேல், கருப்பையா, திலகர் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com