சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்

 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சியில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஏப்ரல் 2013, 6:53 pm

 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சியில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்துக்கு கிளைச் செயலாளர் சீமைராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர்கள் பழனிச்சாமி, திரிசங்கு, சங்கரசபாபதி, கிளைச் செயலாளர்கள் வம்பன், அய்யணன், கணேசன், கிருஷ்ணன், அய்யாவு, ராமர், போஸ், குண்டுமலை, ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   தலைமைக் கழக பேச்சாளர் தமிழரசன், காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி ஆகியோர் நிதிநிலை அறிக்கை குறித்துப் பேசினர்.

  மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனி, நகரச் செயலாளர்கள் விஜயன், சொக்கையா, விவசாய அணிச் செயலாளர் முத்துபாண்டி, மாவட்ட கவுன்சிலர் விமலாராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.