வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அருப்புக்கோட்டையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நரிக்குடியில் நடைபெற்றது.

Updated On :28 ஏப்ரல் 2013, 7:06 pm

அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நரிக்குடியில் நடைபெற்றது.

   சார்பு நீதிபதி, மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். நரிக்குடி ஊராட்சித் தலைவர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேதுபதி, நரிக்குடி எஸ்.ஐ. ராஜாங்கம், வழக்குரைஞர்கள் செல்லையா, செல்வராஜ், தங்கபாண்டியன், ரமேஷ்குமார், ராமநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், ஜீவனாம்சம் பெறுவது, வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் உரிய நஷ்ட ஈடு பெறவும்,  கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் வழக்கு நடத்தவும், சொத்து சம்பந்தமாக உரிமையியல் வழக்குகள் நடத்தவும் வேண்டி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.