ஜெ.பிறந்தநாள் விழா: சிதம்பரம் மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில்


முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் கே.ஏ.கே.முகில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 6 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மதிப்பிலான மோதிரத்தை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி செயலாளர் பாலுபச்சையப்பன், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...