பார்வையற்றோருக்குப் புத்தாடை வழங்கல்
விருதுநகரில் லயன்ஸ் கிளப்பின் சார்பில் பார்வையற்றோர் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விருதுநகரில் லயன்ஸ் கிளப்பின் சார்பில் பார்வையற்றோர் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் ஒய்ஸ்மென் விழியிழந்தோர் மறுவாழ்வு மைய வளாகத்தில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட லயன்ஸ் கிளப்பின் ஆளுநர் பி.ஜே.எம். யேசுபாலன் தலைமை வகித்தார். மாவட்ட முதல் பெண்மணி ராஜம் முன்னிலை வகித்தார்.
விழியிழந்தோர் மையத்தில் உள்ள பார்வையற்றோர் 40 பேருக்கு புத்தாடைகளும் மற்றும் அதே வாளகத்தில் உள்ள எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 50 பேருக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகளையும் மாவட்ட ஆளுநர் வழங்கினார்.
ஏற்பாடுகளை விருதுநகர் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த துணைத் தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...