மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: வனத்துறையினர் உடந்தை என எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காப்புக் காட்டில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலப் பகுதியில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாயும், அதற்கு மாவட்ட அதிகாரி உடந்தையாக

News image
Updated On :6 ஜனவரி 2013, 12:56 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காப்புக் காட்டில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலப் பகுதியில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாயும், அதற்கு மாவட்ட அதிகாரி உடந்தையாக இருப்பதாயும் வெ.பொன்னுப்பாண்டியன எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி, தமிழக முதல்வர் மற்றும் வனத்துறை அமைசர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

வெ.பொன்னுப்பாண்டி எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:

ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமையிடமாகக் கொண்டு சாம்பல் நிற அணில் சரணாலயம் உள்ளது. இங்குள்ள அலுவலர்களின் சட்ட விரோத செயல்களால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு, சாப்டூர் உள்ள வனச்சரகத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் இக் காப்புக் காட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தவறான தகவல்களைக் கொடுத்து இங்குள்ள அலுவலர்கள் தடுத்தி நிறுத்திவிடுகிறார்கள்.

மாவட்ட வன உயிரின காப்பாளரின் சட்ட விரோத நடவடிக்கைகளை அறிந்து தமிழக வனத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பல முறை எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் இங்கிருந்து தவறான தகவல்களைக் கொடுத்து, அரசு செலவில் பல தனிநபர் வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். இவரது சட்ட விரோத செயலால் பல ஆயிரம் டன் விலை உயர்ந்த மரங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, உரிமம் இல்லாத மில்லில் அறுத்து விற்பனை செயய்ப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. இநத வனத்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து முழு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து இருக்கும் வனத்தையாவது காப்பாற்ற வேண்டும் என அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.