விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் எம்.எஸ்.பி. செந்திக்குமார் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 65 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்தப் பள்ளி 1968-ம் ஆண்டு துவக்கப் பள்ளியாக இருந்தது. தற்போது மேல்நிலைப் பள்ளியாக உள்ளது.
இங்கு நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, முன்னாள் பள்ளி ஆசிரியர் கருப்பணன் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியர் தேவசகாயம் முன்னிலை வகித்தார்.
இப்பள்ளியில் படித்தவர்கள் பலர் மருத்துவர்களாகவும், ஊராட்சித் தலைவர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், வழக்குரைஞர்களாகவும், கல்லூரிப் பேராசிரியர்களாகவும், வெளிநாட்டில் பொறியியல் வல்லுநர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில் பேசிய ஆசிரியர் பழனிக்குமார், நல்ல நிலையில் இருக்கும் பழைய மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதில் மருத்துவர் அப்பாஸ் என்பவர் பேசுகையில், ஆண்டுக்கு ஒரு மாணவரின் மேல்படிப்புச் செலவை ஏற்பதாக அறிவித்தார்.
மேலும் பலரும் பள்ளியின் வளர்ச்சிக்கு நிதியுதவி செய்வதாகத் தெரிவித்தனர்.
பழைய மாணவர் சங்கத் தலைவராக தலைமை ஆசிரியர் தேவசகாயம், செயலராக மாரீஸ்வரன், பொருளாளராக அப்பாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

