விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தின் கீழ், நகர் மற்றும் பாலையம்பட்டி ஊராட்சி பகுதிகள் அடங்கும். அருப்புக்கோட்டை நகரின் விரிவாக்கப் பகுதிகளும் இந்த காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இந்த காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 80 போலீசார் பணியில் இருக்கவேண்டும். ஆனால் தற்போது 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.-க்கள், 11 சிறப்பு எஸ்.ஐ.-க்கள் தலைமைக் காவலர்கள் 14 பேர், முதன்மை காவலர்கள் 21 பேர், போலீசார் 2 பேர் என மொத்தம் 52 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். நகரில் எல்லை வேகமாக விரிவடைந்து வருவதால், குறைந்த எண்ணிக்கையிலான போலீசார், பணிச்சுமையால் வழக்கு விசாரணையிலும் தேக்கம் ஏற்படுகிறது.
ஏற்கெனவே இருந்த தலைமைக் காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ-க்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். இவர்கள் விசாரணை, நீதிமன்றப் பணிகளுக்குச் சென்று விடுகின்றனர்.
இதனால் காவல் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறை நிலவுகிறது. புகார் கொடுக்க வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையிலான போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம், 1989ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
இந்த கட்டடம் கட்டப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவ்வப்போது மராமத்து பணி நடக்கிறது. இருந்தபோதும், கட்டடம் பழையது என்பதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

