விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் உள்ள ஸ்ரீ அய்யனார் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது.
ஆலையின் பொதுமேலாளர் வி. நாராயணன் தலைமையில் நடந்த விழாவில் தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் வே. பெரியசாமி கலந்து கொண்டு பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கும் முதல் மற்றும் இரண்டாவது பணிப் பிரிவுகளுக்கு சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில் தொழிற்சாலைகள் ஆய்வாளர் வேலுமணி மற்றும் பி. சங்கரராமேஸ்வரன் கலந்து கொண்டு பாதுகாப்பு தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் ஆலை மேலாளர்கள், மனித வளத்துறை அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.