தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

காட்டுப் பகுதியில் கருந்திரி தயாரித்த இருவர் கைது

காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கருந்திரி தயாரித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :13 மே 2013, 12:15 am IST

காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கருந்திரி தயாரித்த இரண்டு பேர் கைது

செய்யப்பட்டனர்.

   கோட்டைப்பட்டி, துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம் கிராமங்களில் சட்டவிரோதமாக  காட்டுப்பகுதியில் கருந்திரி தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கிராமங்களில் காவல் துறையினர் ரோந்து சென்றனர்.

   மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் காட்டுப் பகுதியில் செட் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பசாமி (40), பாக்கியராஜ் (40) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அங்கு தயாரித்து வைத்திருந்த 100 கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.