திருச்சுழியில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது குழாய் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது.
திருச்சுழியில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருச்சுழிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் ஆழ்குழாய் மோட்டார் அருப்புக்கோட்டை செல்லும் வழியில் சாலையோரமாக பெரிய கண்மாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக மானாமதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியின்போது குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால், திருச்சுழியில் சில இடங்களில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதித்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவர் பாஸ்கரன் கூறுகையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சுழி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
திருச்சுழி கிழக்கு தெரு, பூமிநாதன் கோவில் தெருவுக்குச் செல்லக் கூடிய குழாய்கள் முற்றிலும் சேதமடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது.
சாலையமைக்கும் பணிகள் முடிந்த பின்னரே குடிநீர் குழாய்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

