காரியாபட்டி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டி பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் அலைந்து திரிகின்றன. பஸ் நிலையம், பஜார் பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சென்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அலைகின்றன. இதனை பிடிப்பதற்கோ, தடுப்பதற்கோ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றனர்.
கால்நடை மருத்துவர் கூறும்போது, அக்டோபர், நவம்பர் மாதங்கள் நாய்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த மாதங்களில் நாய்கள் இனப்பெருக்கத்திற்காக கூடுகின்றன. இதை தடுப்பவர்களை நாய்கள் கடிக்கின்றன. கூட்டமாக நாய்கள் நிற்கும்போது அதன் அருகில் செல்லாமல் தூரமாக செல்வது தான் பாதுகாப்பு. இனப்பெருக்கத்தை தடுக்க வருகிறார்களோ என்ற பயத்தில் அவை எதிரே இருப்பவர்களை கடித்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, பொதுமக்கள்தான் விலகிச்செல்ல வேண்டும் என்றார்.
காரியாபட்டி பகுதியில் அச்சுறுத்தும் வகையில் நாய்களும், போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளும் சுற்றித்திரிவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

