விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காசோளப்பயிர்களை நாசம் செய்து வரும் காட்டுபன்றிகளை ஒழிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் சார்பாக நந்திக்குண்டு தங்கவேல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: மல்லாங்கிணர் பகுதியில் திம்மன்பட்டி, நந்திக்குண்டு, புளியம்பட்டி, பிசிண்டி, மாந்தோப்பு, பாம்பாட்டி உட்பட பல கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காசோளம் பயிர் செய்துள்ளனர். தற்போது கதிர் விளையும் நிலையில் பயிர் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் காட்டுபன்றிகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. பன்றிகள் ஒவ்வொன்றும் சுமார் 200 கிலோ எடையில் எருமை மாடு போன்று உள்ளதால் விவசாயிகளால் பன்றிகளை பிடிக்க முடியவில்லை.
மாந்தோப்பு வழியாக செல்லும் குண்டாற்றின் புதர் பகுதிகளில் பதுங்கியுள்ள பன்றிகள் இரவு நேரங்களில் பயிர்களை நாசம் செய்து விட்டு சென்று விடுகின்றன. விவசாயிகள் நலன் கருதி இப்பகுதியில் பதுங்கியுள்ள காட்டுபன்றிகளை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

