செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டி செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்தனர். திருவிழாவின் முக்கிய
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டி செல்வ காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தீச்சட்டி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முத்துப்பாண்டி என்ற பக்தர் அம்மனுக்கு 101 தீச்சட்டி ஏந்தி பூக்குழி இறங்கினார். அதே போல் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர்.

 500-க்கும் அதிகமான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வ காளியம்மன் கோயில் நிர்வாகக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com