கோயில் கும்பாபிஷேக விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள மந்திரிஓடையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அய்யனார் கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. 300
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள மந்திரிஓடையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அய்யனார் கோயில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. 300 ஆண்டுகளுக்கு முன், சுயம்பு வடிவில் உருவான இக்கோயில், திருமலை நாயக்கர், பாண்டிய மன்னர்கள் வழிபட்டு வந்தனர். புரட்டாசியில் பொங்கல் வைத்து, மருதங்குடி மருதாயி கோயில் பூஜாரி, பூஜை செய்து, நடந்தே சென்று, பூஜை பொருட்களை கொடுத்து, சிறப்பு செய்வது வழக்கம். மாதம் மும்மாறி மழை பெய்து, இருபோகம் நெல் விளைந்து வந்தது. சிறிய அறையில் இருந்த இக்கோயிலுக்கு, 1980, 1998-ல் கும்பாபிஷேகம் நடத்தினர். காலப்போக்கில், வழிபாடு குறைந்ததால், இப்பகுதி நெல் விவசாயம் பாதிக்கப்பட்டதாக, அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். தற்போது கோபுரம் எழுப்பப்பட்டு, பல்வேறு மண்டகபடிகள் கட்டி, விநாயகர், சுப்பிரமணியர், பூர்ணபுஷ்பகலா சமேத நடுகாட்டு அய்யனாருக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும், அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. பத்தாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com