மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசலிங்கம் பல்கலை.யில் ருமேனியா மொழி பயிற்சி வகுப்பு தொடக்க விழா

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுத் துறை சார்பில், ருமேனியா மொழி பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 9:40 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுத் துறை சார்பில், ருமேனியா மொழி பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.

கலசலிங்கம் பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்கள் உயர் படிப்பிற்கு வெளிநாடுகள் செல்வதற்கும், வேலை வாய்ப்பு பெற்று வெளிநாடு செல்வதற்கும் பயனுள்ள வகையில் ஜப்பனிஸ், பிரஞ்ச், கொரியன் உள்ளிட்ட மொழிகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம், ருமேனியா நாட்டில் உள்ள அகோரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி அப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை செமிடா எலேனா டேவிட், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வருகைபுரிந்து மாணவர்களுக்கு ருமேனிய மொழி கற்றுத் தருகிறார். இப் பயிற்சி 120 மாணவர்களுக்கு காலை மற்றும் மாலையில் அளிக்கப்படுகிறது.

பயிற்சிக் குழுத் தலைவர் டாக்டர் நெல்லையா வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் மதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.