விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் மண் வளத்தை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்லாங்கிணறு பேரூராட்சியிலும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளிலும் உள்ள கடைகளில் கேரிப்பை, டீ கப் போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உபயோகித்த பின் வீசி எறியப்படும் இவற்றால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் மண் வளமும் பாதிக்கப்பட்டு இயற்கை வளம் கெடுகிறது. எனவே இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிய நச்சுத்தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை தடுக்க வேண்டியது சுகாதாரத் துறை அதிகாரிகளின் கடமையாகும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து எடுக்க நிதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியிலும், அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. எனவே அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

