விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திங்கள்கிழமை காலை மது அருந்திய துப்புரவு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளராக இருந்தவர் மலைச்சாமி(27). தாற்காலிக பணியாளராக பணிபுரிந்தவர் குருசாமி(38). இருவரும் திங்கள்கிழமை காலை காரியாபட்டி காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை சுத்தம் செய்துவிட்டு அதற்கான கூலியையும், ஒரு மது பாட்டிலையும் வாங்கினராம். அந்த மதுவைக் குடித்த சில நிமிஷங்களில் இருவரும் சுருண்டு விழுந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பணியாளர்களின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் காரியாபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மது பாட்டிலை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், டி.எஸ்.பி., பாலசுப்பிரமணி ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து காரியாபட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

