காரியாபட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தருமபுரியைச் சேர்ந்தவர் விமலன் (35). லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான இவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிகொண்டு சென்றார். காரியாபட்டி அருகே கள்ளிக்குடி விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் விமலனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1400-ஐ பறித்துக்கொண்டதோடு லாரியையும் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து விமலன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் எம். இலுப்பைகுளத்தைச் சேர்ந்த கணேசன் (40), மற்றும் ராமகிருஷ்ணன் (52) ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது லாரியை கடத்தியது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். லாரியுடன் தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

