சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

நரிக்குடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி நரிக்குடி தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

Updated On :9 நவம்பர் 2014, 7:32 pm

நரிக்குடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி நரிக்குடி தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நரிக்குடி ஒன்றியத்தில் வீரசோழன், பாதாளங்குறிச்சி, நல்லுக்குறிச்சி, எஸ்.வல்லாகுளம், வேளாங்குளம், மானூர், ஏ.முக்குளம் உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களின் மையப்பகுதியில் நரிக்குடி அமைந்துள்ளது.

மேலும், சுற்றியுள்ள கிராமங்களில் தீவிபத்து ஏற்படும் போது நரிக்குடியிலிருந்து 16கி.மீ., தொலைவில் உள்ள திருச்சுழி தீயணைப்பு நிலையத்திலிருந்து தான் வாகனம் வரவேண்டிய நிலை உள்ளது. தீவிபத்து ஏற்பட்டு வாகனம் வருவதற்குள் முற்றிலும் பொருட்கள் எரிந்து சேதமடைந்து விடுகின்றன.

கிராம பகுதியில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டால் திருச்சுழியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து 1 மணி நேரத்திற்கு பின்புதான் வாகனம் வருகிறது.

சில நேரங்களில் 20 கி.மீ., தொலைவில் உள்ள, சிவகங்கை மாவட்டம் பார்த்திபனூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனம் வருவதற்குள் பொருள்கள் முற்றிலும் சேதமடைந்து விடுகிறது.

எனவே, நரிக்குடி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.