திருச்சுழி பகுதியில் விவசாய பயிர்களில் அதிகளவில் காணப்படும் புரோட்டினியா புழுக்களை அழிப்பதற்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திருச்சுழி பகுதியிலுள்ள கத்தாளம்பட்டி, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை உள்ளிட்ட கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசிப்பயறு மற்றும் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக நன்கு வளர்ந்து காணப்பட்ட பயிர்களில், தற்போது கலர் கலராக காணப்படும் புரோட்டினியா புழுக்கள் பயிர்களைத் தாக்கி வருகின்றன. இப்புழுக்கள் இலையின் மேல்பகுதியை தின்றுவிடுவதால் அதிக அளவில் பயிர்கள் சேதமடைகின்றன. பயிர்களை பாதித்து வரும் இந்த புழுக்களை அழிக்க வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
அதன்படி, ஒரு ஏக்கருக்கு மோனோகுரோட்டோபாஸ் 250மிலி., மற்றும் வேப்பெண்ணெய் 250 மிலி., அல்லது குளோரிபைரிபாஸ் 250மிலி., மற்றும் வேப்பெண்ணெய் 250மிலி சேர்த்து காலை அல்லது மாலை நேரங்களில் பயிர்களில் தெளிக்கவேண்டும். இதன் மூலம் புழுக்களை கட்டுப்படுத்திட முடியும்.
இத்தகவலை எம்.ரெட்டியபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் நாச்சியார் அம்மாள் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.