காரியாபட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு

காரியாபட்டியில் மாவட்ட மார்க்சிஸ்ட் சார்பாக 7-ஆவது தாலுகா மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
Updated on
1 min read

காரியாபட்டியில் மாவட்ட மார்க்சிஸ்ட் சார்பாக 7-ஆவது தாலுகா மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

தாலுகா குழு உறுப்பினர் அம்மாசி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். காவிரி, வைகை, குண்டாறு, தெற்காறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

சென்னம்பட்டி வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும், காரியாபட்டி பேரூராட்சிக்கு தினமும் 30 லட்சம் லிட்டர் தாமிரவருணி குடிநீர் வழங்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com