காரியாபட்டி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சி சீகனேந்தலில் மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மர அறுவை மில் வைத்துள்ளார்.
இந்த மில்லை தனது தம்பி லட்சுமி நாராயணன் என்ற பரசுராமன் (45) பொறுப்பில் ஒப்படைத்திருந்தார். இதனால், வேலையும் பார்த்துக் கொண்டு அங்கேயே பரசுராமன் தங்கி இருந்தாராம். செவ்வாய்க்கிழமை அருகேயுள்ள கண்மாயில் அவர் குளிக்கச் சென்றாராம். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆவியூர் சப்- இன்ஸ்பெக்டர் வீரணன், உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.