விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தென் மண்டல தலைவர் கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் முறையாக துப்புரவு பணிகள் நடைபெறாததால் வீதியெங்கும் குப்பை குவிந்துள்ளது. தெருவாரியாக கொசு மருந்து அடிப்பதில்லை. தெருக்களில் சுகாதாரமற்ற நிலை உள்ளதால் இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மல்லாங்கிணறு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மல்லாங்கிணறு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி அனைத்து வார்டுகளிலும் கொசுமருந்து அடிப்பதுடன், மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

