காரியாபட்டி அருகே விளைந்த பயிர்கள் தீ விபத்தில் சேதமடைந்ததால் விவசாயிகள், இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி அருகேயுள்ள கரியனேந்தல் விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் துவரை, பாசிப்பயறு, உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்திருந்தனர். போதிய மழை இல்லாததால், எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர். பாதி விளைந்ததும் விளையாத துவரை செடிகளை விவசாயிகள் அறுவடை செய்து பிரித்தெடுத்து, காட்டிலேயே களம் அமைத்திருந்தனர். திங்களன்று இரவு திடீரென அறுவடை செய்து வைத்திருந்த துவரை செடிகள் தீப்பற்றி எரிந்தது. தீ பரவியதில் அறுவடை செய்யாமல் இருந்த துவரை, உளுந்து, மொச்சை செடிகளும் தீயில் கருகி சேதமாயின. பல ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட பயிர்கள் தீயில் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென விவசாயிகள் சங்க தலைவர் குமார் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.