உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

காவலர் குடும்பங்களுக்கான மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்ட அளவில் காவல் துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :

விருதுநகர் மாவட்ட அளவில் காவல் துறையினர் குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

   விருதுநகர் மாவட்ட காவல் துறையும், அப்போலோ மருத்துவமனையும் இணைந்து 40 வயதிற்கு மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச மருத்துவமுகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடந்தது.

 முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், உதவி காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், காவல் துறையினர் குடும்பங்களைச் சேர்ந்த இருபாலருக்கும் சர்க்கரை நோய், ரத்தவகை கண்டறிதல், இ.சி.ஜி., மூட்டுவலி, கண் சிகிச்சை, ஸ்கேன், பல் சம்பந்தமான நோய்களுக்கு அப்போலோ மருத்துவமனையின் மருத்துவக்குழுவினர் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளும் வழங்கினர்.

 மருத்துவ முகாமில் சூலக்கரை ஆயுதப்படை மைதான குடியிருப்பு காவலர் குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், அக்.3,10,17 ஆகிய தேதிகளில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

  இதில் காவல் துறை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என்றஉ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.