திருச்சுழி-தமிழ்ப்பாடி சாலையில் திடீர் பள்ளங்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

விருதுநகர் -பார்த்திபனூர் சாலையில், திருச்சுழியிலிருந்து தமிழ்ப்பாடி கிராமம் இடையிலான பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்குகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் -பார்த்திபனூர் சாலையில், திருச்சுழியிலிருந்து தமிழ்ப்பாடி கிராமம் இடையிலான பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்குகின்றனர்.
       விருதுநகர்-பார்த்திபனூர் மாநில நெடுஞ்சாலையானது, விருதுநகரிலிருந்து தொடங்கி அருப்புக்கோட்டை , திருச்சுழி, நரிக்குடி வழியாக பார்த்திபனூரில் இணைகிறது. இந்த நெடுஞ்சாலையில், தமிழ்ப்பாடி கிராமத்துக்கும், திருச்சுழிக்கும் இடை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.  இச்சாலையில் தற்போது ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து சுமார் 1 அடி ஆழமும், 2 அடி நீளத்துக்கும் பல்ளங்கள் உருவாகியுள்ளன.     இதனால், இப்பகுதியில் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
    எனவே, இச்சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com