எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காவல் நிலையத்தில் விசாரணை கைதி தற்கொலை: பயிற்சி சார்பு ஆய்வாளர்களுக்கு எஸ்பி. உத்தரவு

அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து பயிற்சிசார்பு ஆய்வாளர்கள், உயர்

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:49 am

DIN

அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து பயிற்சிசார்பு ஆய்வாளர்கள், உயர் அதிகாரிகள் அனுமதியின்றி யாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி (23) என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்திருந்தனர். அப்போது அவர் காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், அனைத்து துணைக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பயிற்சி சார்பு ஆய்வாளர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள அதில் கூறப்பட்டிருப்பதாவது: எந்த ஒரு காரணத்தை கொண்டும் குடி போதையில் இருப்பவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு வரக் கூடாது. அப்படி கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதற்கான சான்றிதழ் பெற வேண்டும். சாலையில் குடி போதையில் தகராறு செய்பவர்கள், காவலர்களை எதிர்த்து பேசினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவர்களை அடிக்கவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ கூடாது. காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் அனுமதியின்றி யாரையும் பயிற்சி சார்பு ஆய்வாளர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரக் கூடாது.
அதேபோல், காவல் நிலையத்தில் எதிரிகள் கைக்கு கிடைக்கும் வகையில் பிளேடு, ஆசிட், கண்ணாடி டம்ளர், ஆணிகள் போன்றவற்றை வைக்கக் கூடாது. இந்த அறிவுரைகளை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் சிறப்பு கூட்டம் நடத்தி பயிற்சி சார்பு ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.