விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாத்தூரில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:47 am

DIN

சாத்தூரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலைகளில் குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த குழிகள் சரியாக மூடப்படாததால், சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அதே போல் சாத்தூர் 1 ஆவது வார்டுக்குள்பட்ட குருலிங்காபுரம், பெரியார் நகர், வெள்ளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே சாலலைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக சாத்தூர் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விட்டன. ஒரு சில பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கிக் கிடக்கிறது.
 இதனால் இருசக்க வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
 மேலும் இந்த பகுதியில் பள்ளிகளும் உள்ளதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.  எனவே இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க சாத்தூர் நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.