இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சிவகாசியில் மழைநீர் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

சிவகாசியில் சேதமடைந்துள்ள மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:28 am IST

சிவகாசியில் சேதமடைந்துள்ள மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் - விருதுநகர் புறவழிச்சாலையில் இரு புறமும்  உள்ள மழைநீர் செல்லும் வாய்க்கால் பல இடங்களில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக புறவழிச்சாலையிலிருந்து, லிங்கபுரம் காலனிக்கு செல்லும் சாலைக்கு சில மீட்டர் தூரத்தில் மழைநீர் செல்லும் வாய்க்கால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அப்பகுதியில் தனியார் ஒருவர், அவரது கட்டடத்துக்கு செல்லும் வழியில் உள்ள  மழைநீர் வாய்க்காலை 
சேதப்படுத்தியுள்ளார். 
 அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், மழைநீர் வாய்க்கால் இருப்பதை கண்டு கொள்ளாமல் மூடிவிட்டனர். லிங்கபுரம் காலனிக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இதனால், மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் வழிந்தோடுவதால் சாலையும் பழுதடைகிறது.
 எனவே, நகராட்சி நிர்வாகம், விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.