சிவகாசியில் சேதமடைந்துள்ள மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் - விருதுநகர் புறவழிச்சாலையில் இரு புறமும் உள்ள மழைநீர் செல்லும் வாய்க்கால் பல இடங்களில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக புறவழிச்சாலையிலிருந்து, லிங்கபுரம் காலனிக்கு செல்லும் சாலைக்கு சில மீட்டர் தூரத்தில் மழைநீர் செல்லும் வாய்க்கால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அப்பகுதியில் தனியார் ஒருவர், அவரது கட்டடத்துக்கு செல்லும் வழியில் உள்ள மழைநீர் வாய்க்காலை
சேதப்படுத்தியுள்ளார்.
அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், மழைநீர் வாய்க்கால் இருப்பதை கண்டு கொள்ளாமல் மூடிவிட்டனர். லிங்கபுரம் காலனிக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இதனால், மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் வழிந்தோடுவதால் சாலையும் பழுதடைகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம், விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


