சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள எதிர்கோட்டையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கணபதி, தெய்வானை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில், சுப்பிரமணி, மாரிமுத்து ஆகிய இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்ணார்பட்டியைச் சேர்ந்த இருளப்பன் மகன் பரமசிவம் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதன்மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த விஜயலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்

நகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா், 10 அருளாளா்கள், ராஜராஜசோழன் சந்நிதிகளுக்கு கும்பாபிசேகம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

