செங்கோட்டை - கோவை இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய நேரப்படி திங்கள்கிழமைகளில் வண்டி எண்- 06021 கோவை - செங்கோட்டை சிறப்பு ரயில் ஏப். 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25 ஜூலை 2 ஆகிய தேதிகளில் கோவையில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது.
இதேபோல், செவ்வாய்க்கிழமைகளில் வண்டி எண்- 06022, செங்கோட்டை - கோவை சிறப்பு ரயில் ஏப். 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ரயில், பயணிகள் நலன் கருதி, செங்கோட்டையில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயில் பொள்ளாச்சி சந்திப்பு, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
இதில், 3 -ஆம் வகுப்பு ஏசி, தூங்கும் வசதியுள்ள இரண்டாம் வகுப்புக்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. சிறப்பு ரயிலின் நேர மாற்றம் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ரயிலை தினசரி விரைவு ரயிலாக அறிவிக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

