எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கும்பகோணத்தில் ஏப்.19-இல் உண்ணாவிரதம்: வாகன பழுதுபார்ப்போர் சங்க கூட்டமைப்பு முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்.19 ஆம் தேதி  

Updated On :18 ஏப்ரல் 2018, 8:34 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்.19 ஆம் தேதி  கும்பகோணத்தில் உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செவ்வாய்கிழமை இச்சங்க மாநில தலைவர் ஜானகி ராமன் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் தொழிற் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அரசு தொழிற்பயிற்சி முடித்த 100 நபர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையை வழங்கினார். 
முன்னதாக நடைபெற்ற தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலத்தை, சங்க மாநில தலைவர் ஜானகிராமன் தொடங்கி வைத்தார். பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து புறப்பட்ட  ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
நிகழ்ச்சியின் போது,  இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ஜானகிராமன் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் ஏப்.19 ஆம் தேதி கும்பகோணத்தில்  உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.