தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிவகாசியில் கூடுதல்  போக்குவரத்து போலீஸார் நியமிக்க கோரிக்கை

சிவகாசியில் கூடுதல் போக்குவரத்து போலீஸார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:29 am IST

சிவகாசியில் கூடுதல் போக்குவரத்து போலீஸார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி நகரில், அம்பேத்கார்சிலை, பேருந்துநிலையம், நகராட்சி தினசரி காய்கறிச்சந்தை, சிவன்கோயில் உள்ளிட்ட 10 இடங்களில் போக்குவரத்து போலீஸார் நின்று போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும். 
தற்போது போக்குவரத்து போலீஸில் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 11 போலீஸார் மட்டுமே உள்ளனர்.
இதனால் போக்குவரத்தினை சீரமைப்பது என்பது போலீஸாருக்கு சவாலான விஷயமாக உள்ளது.
போக்குவரத்து போலீஸார் பள்ளி நேரங்களில் காலையில் சுமார் 8 மணி முதல் 9 மணி வரை பணியில் ஈடுபடுவார்கள். போக்குவரத்து போலீஸாரின் உணவு இடைவேளையின் போது,  பொதுமக்கள் ஒரு வழிப்பாதையை கடைபிடிக்காமல் செல்வதாலும், பல இடங்களில் இருசக்கரவாகனம் முறையற்று நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே சிவகாசியில் போக்குவரத்து போலீஸாரை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.