எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ராஜபாளையம் அருகே சொத்துத் தகராறில் விவசாயி கொலை

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் விவசாயி  வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:16 am IST

ராஜபாளையம் அருகே சொத்து தகராறில் விவசாயி  வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
  ராஜபாளையம் அருகேயுள்ள மேலூர் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் ( 40). இவருக்கும், அவரது அண்ணன் கருப்பசாமிக்கும் (55)  சொத்து தகராறு இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமை மாரியப்பனின் மகன் கருப்பையா, அந்தப் பகுதியில் நின்ற போது கருப்பசாமியின் மகன் செல்வம் (30) வந்து தகராறு செய்தார்.
  இதனைத்தொடர்ந்து மாரியப்பன் அண்ணன் வீட்டுக்குச் சென்று, செல்வத்தை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம்  செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு சித்தப்பா மாரியப்பனின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார். மாரியப்பன் வெளியே வந்ததும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், செல்வம் சரமாரியாக வெட்டினார். 
 இதனைத் தடுக்க முயன்ற மாரியப்பனின் மனைவி ராமலட்சுமியையும் அரிவாளால் வெட்டினார்.  
   காயமடைந்த நிலையில் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.
     பலத்த காயம் அடைந்த ராமலட்சுமி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 இதுதொடர்பாக சேத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து புதன்கிழமை செல்வத்தை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.