ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 6:15 am IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் முக்கிய திருவிழாவான ஆடித்திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 3ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குவதையடுத்து இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
இதற்கு சாத்தூர் கோட்டாட்சியர் மங்களராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் சாத்தூர் வட்டாட்சியர் சாந்தி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, நென்மேனி, அப்பனேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இருக்கன்குடி கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
மேலும் இக்கூட்டத்தில் திருவிழாவின் போது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, நடமாடும் கழிப்பறை வசதி, தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும், காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.